சில்லி பாய்ன்ட்...

* ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட பிறகு ஆஸி. வீரர்கள்  மாலத்தீவு வழியாக பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். அதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ,  பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துள்ளது.

* ஆசிய குத்துச்சண்டை போட்டி மே 21ல்  துபாயில் தொடங்க உள்ளது. அந்தப்போட்டியில் பங்கேற்க இருந்த 20 பேர் கொண்ட இந்திய குழுவுக்கு துபாய் தூதரகம் இன்னும் விசா வழங்கவில்லை.

* இந்தியா - நியூசி. ஹாக்கி அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் மே 29, 30 தேதிகளில் நடைபெற இருந்தன. கொரோனா தொற்று இந்தியாவில் அதிகமாக இருப்பதால் நியூசி அணி இந்தியா வர மறுத்து விட்டது. அதனால் 2 ஆட்டங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 10 வாரங்கள் உள்ளன. ஆனால் ஜப்பானில் உள்ள 80 சதவீத மக்கள் அங்கு ஒலிம்பிக் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக புதிய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

* டென்னிஸ் உலகின் முன்னனி வீரர்களில் ஒருவரான ரோஜர் பெடரர் (சுவிஸ்)  காயம் காரணமாக கடந்த ஓராண்டாக எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நேற்று அவர், ‘மறுபடியும் விளையாடத் தொடங்கியதும், மீண்டும் முன்னணிக்கு வருவேன்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories: