பயிற்சி ஆட்டமல்ல

இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. அந்தப் போட்டியில் பங்கேற்கும் நியூசிலாந்து வீரர்கள் எல்லோரும் இங்கிலாந்து சென்று ‘குவாரன்டைனில்’ இருக்கின்றனர். காரணம்  இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் நியூசி. விளையாட உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பு  நியூசி வேகம் நீல் வேக்னர், ‘இங்கிலாந்துக்கு எதிரான 2டெஸ்ட் போட்டிகளை உலக டெஸ்ட் பைனலுக்கான பயிற்சி ஆட்டமாக நாங்கள் கருதவில்லை. அங்கு விளையாடுவதை பெருமையாகக் கருதுகிறோம். கூடவே அந்தப் போட்டிகளில் வெல்ல விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>