ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய அணி ஜூலை 10ம் தேதி முதல்  வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான 22 பேர் கொண்ட அணியை  ‘கிரிக்கெட் ஆஸ்திரேலியா’ நேற்று அறிவித்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறாத கம்மின்ஸ், ஸ்மித், வார்னர் உட்பட 7 பேர் மீண்டும் அணியில் இடம் பெறறுள்ளனர். இப்போது இங்கிலாந்தில் உள்ள லாபுஷேன் சேர்க்கப்படவில்லை.

ஆஸி அணி: பிஞ்ச் (கேப்டன்),  ஆஷ்டன் ஏகார், பெஹரண்டார்ப், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், ஹேசல்வுட், ஹென்ரிக்ஸ், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மெரிடித், ஜோஷ் பிலிப், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், தன்வீர் சங்கா,  டி ஆர்சி ஷார்ட், ஸ்மித், ஸ்டார்க்,  ஸ்டோய்னிஸ், ஸ்வெப்சன், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேடு, வார்னர், ஸம்பா.

Related Stories: