கோவின் இணையதளம் 14 மொழிகளில் வெளியீடு

புதுடெல்லி: தடுப்பூசி வழங்கலை ஒருங்கிணைப்பதற்காக கோவின் என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே வடிவமைக்கப்பட்ட இந்த கோவின், இந்தி உட்பட 14 பிராந்திய மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்திலிருந்து பிராந்திய மொழிகளில் இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. கொரோனா பரிசோதனைக்காக தற்போது 10 பரிசோதனை நிலையங்கள் அரசின் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றில் மேலும் 17 பரிசோதனை நிலையங்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பரிசோதனைகளை விரைவாக மேற்கொண்டு முடிவினைப் பெற முடியும். இத்தகவலை கொரோனா தொடர்பான உயர்மட்ட அமைச்சர்களின் 26வது கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பகிர்ந்துகொண்டார்.

Related Stories: