தனியார் மருத்துவமனைகளில் கிடைக்க ஏற்பாடு ரெம்டெசிவிர் மருந்து வாங்க நேரு மைதானம் வர வேண்டாம்: காவல் துறை அறிவிப்பு

சென்னை: ரெம்டெசிவிர் மருந்து தனியார் மருத்துவமனைகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், சென்னை நேரு மைதானத்துக்கு வர வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது.  இதில், கொரோனா நோயாளிகளின் உறவினர்கள், மருந்துகள் பெற சிரமப்படுவதை போக்க கொரோனா நோயாளிகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலே ரெம்டெசிவிர் மருந்துகள் இன்று முதல் கிடைக்க தமிழக அரசால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவோர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அணுக அறிவுறுத்தப்படுகிறது. இதனால் கடந்த 15ம் தேதி முதல் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வழங்கப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்துகள் இனி அங்கு வழங்கப்பட மாட்டாது. எனவே பொதுமக்கள் அங்கு வர வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>