தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 228 படுக்கைகள்:கொரோனா வார்டு பணிகள் மும்முரம்

தண்டையார்பேட்டை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 228 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தயாராகி வருகிறது. தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அரசு தொற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மருத்துவமனையில் 5 வார்டுகள் அமைக்கப்பட்டு 75 ஆக்சிஜன் படுக்கைகளுடன் மிதமான மற்றும் மாறுபட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவமனை முழுவதுமே கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கா, மேலும் 228 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 92 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 320 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. படுக்கைகளுக்கு ஆக்சிஜன் குழாய்கள், ஜெனரேட்டர், அனைத்து படுக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா உள்ளிட்டவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி இந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: