1.18 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை: சார்ஜாவிலிருந்து நேற்று சென்னை வந்த சிறப்பு ஏர் அரேபியா விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்ேபரில், அவர்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தனர். உடனடியாக சுங்கத்துறையினர் ஏர் அரேபியா விமானத்தில் வந்த 92 பயணிகளையும், அவர்கள் உடமைகளையும் சோதனையிட்டனர். அப்போது, கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்த பயணி முகமது அராபத் (24) மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரது சூட்கேஸ், பைகளை தீவிரமாக சோதித்தனர்.

அதிலிருந்த எமர்ஜென்சி விளக்கை கழற்றி பார்த்தபோது, அதன் பின்பகுதியில் 18 தங்க கட்டிகள் இருந்தன. அதன் மொத்த எடை 2.39 கிலோ. சர்வதேச மதிப்பு 1.18 கோடி. அதை பறிமுதல் செய்து, முகமது அராபத்தை கைது செய்தனர். அவர், சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

Related Stories: