கொரோனா நிதி வழங்க வைத்திருந்தது ரேஷன் கடையை உடைத்து 7.36 லட்சம் கொள்ளை

சென்னை: பொதுமக்களுக்கு கொரோனா நிதி வழங்க ரேஷன் கடையில் வைத்திருந்த 7.36 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் சைதாப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. சைதாப்ேபட்டை காவேரி நகர் ரயில்வே பார்டர் சாலையில் 2 ரேஷன் கடைகள் (எண் 24, 25) உள்ளன. இங்கு, கடந்த 15ம் தேதி முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதில், 24ம் எண் ரேஷன் கடையில் பணிபுரியும் குணசேகரன் மற்றும் சதீஷ் ஆகியோர் நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு கொரோனா நிதி வழங்கிவிட்டு மீதமுள்ள 7.36 லட்சத்தை ரேஷன் கடையில் உள்ள கல்லாபெட்டியில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

நேற்று காலை இவர்கள் கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்து. உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்திருந்த 7.36 லட்சம் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: