சிறுமியை கடத்தி திருமணம் வாலிபர் சிறையில் அடைப்பு: உடந்தையான தாயும் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது மகள் தேவி (16). (பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). தேவிக்கும், தண்டையார்பேட்டை வஉசி நகரை சேர்ந்த மீனவர் சரத் (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலானது. கடந்த 10ம் தேதி ஆசை வார்த்தை கூறி தேவியை பெரியபாளையம் அழைத்து சென்ற சரத், அங்கு கோயிலில் திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், வீட்டில் சரிவர சமைக்கவில்லை என கூறி தேவியிடம் சரத் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சரத், தேவியை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் தலை, வலது கை, இடது கால் பகுதிகளில் வெட்டு விழுந்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் துடித்த தேவியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் தேவி புகார் செய்தார். அதன்பேரில், சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது, பாலியல் தொல்லை கொடுத்தது, கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலசார், சரத் மற்றும் உடந்தையாக இருந்த சரத்தின் தாய் தேசம்மாள் (48) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர். தலைமறைவான சரத்தின் நண்பர் பிரபுவை தேடி வருகின்றனர்.

Related Stories:

>