×

முழு ஊரடங்கின்போது சென்னையில் வெளியே சுற்றிய 2,716 பேர் மீது வழக்கு பதிவு: 52 கடைகளுக்கு சீல்

சென்னை: கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கின்போது அரசு உத்தரவை மீறி சென்னை முழுவதும் வாகனங்களில் வெளியே சுற்றித் திரிபவர்களை தடுக்க, மாநகர காவல் துறை சார்பில் 318 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில், நோய் தொற்றை பரப்பும் வகையில் வெளியே சுற்றியதாக 2,716 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 2,793 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக 2,925 பேர் மீதும், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்ததாக 251 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக 3 லட்சத்து 46 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டது. அரசின் முழு ஊரடங்கை மீறி திறக்கப்பட்டிருந்த 52 கடைகளை போலீசார் மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் மூடி சீல் வைத்தனர்.

Tags : Chennai , Case registered against 2,716 people roaming outside Chennai during full curfew: 52 shops sealed
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...