இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

புதுடெல்லி:  இஸ்ரேல் -காசா போர் முனையில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும்  இடையே கடந்த 8 நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நடைபெற்று வரும்  தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில்  நிரந்தர பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி கலந்து கொண்டார். இஸ்ரேலில் பொதுமக்களை குறிவைத்து காசாவில் இருந்து  ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமாக ராக்கெட், துப்பாக்கி சூட்டுக்கு இந்தியா சார்பில் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். ஹமாஸ் செயல்பாட்டுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடி என்ற வார்த்தையை இந்தியா பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு  இந்தியாவே பலியாகி இருப்பதால் வார்த்தைகள் கவனமாக கையாளப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த சவுமியா சந்தோஷ் என்பவரை போராட்டக்காரர்களின் கண்மூடித்தனமாக ராக்கெட் தாக்குதலில் இந்தியா இழந்துவிட்டது.  இது குறித்து ஐநா நிரந்தர பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பாதுகாப்பை கேள்வி குறியாக்கும் வகையிலும் கடந்த சில நாட்களாக தொடர் தாக்குதல் நடந்து வருகின்றது.  வன்முறை, ஆத்திரமூட்டும் செயல்பாடுகள், அழித்தல்  நடவடிக்கை என அனைத்தையும் நாங்கள் கண்டிக்கிறோம். ஹமாஸ் நடவடிக்கைக்கு  இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கிறது . அதே நேரத்தில் இரு தரப்பும் தீவிர கட்டுப்பாடு காட்டவும், அதிகரித்து வரும் பதற்றங்களில் இருந்து விலகி இருக்கவும் வேண்டும் . இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: