27 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கு கீழ் சரிவு: ஒரே நாளில் 4,106 பேர் பலி

புதுடெல்லி: கொரோனா 2வது அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த 1ம் தேதி அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது. அதன்பின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. ஆனாலும், கடந்த ஒரு மாதமாக 3 லட்சத்துக்கும் அதிகமாகவே தினசரி பாதிப்பு இருந்தது.இந்நிலையில், 27 நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 386 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 நாட்களுக்குப் பிறகு பாதிப்பு 3 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி உள்ளது. கடந்த ஏப்ரல் 20ம் தேதி 2.95 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 2 கோடியே 49 லட்சத்து 65 ஆயிரத்து 463 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. பலி 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,106 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 390 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35 லட்சத்து 16,997 ஆகும்.

Related Stories: