3 கன்றுகளை ஈன்ற பசு

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர், புது வீட்டு வட்டம் பகுதியை ேசர்ந்தவர் ராஜமாணிக்கம். விவசாயி. இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை ஒரு பசுமாடு கன்றை ஈன்றது. சிறிது நேர இடைவௌியில் அடுத்தடுத்து மேலும் 2கன்றுகளை அந்த பசு ஈன்றது. இதனால் ராஜமாணிக்கம் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் வந்து அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.

இதுகுறித்து விவசாயி ராஜமாணிக்கம் கூறுகையில், குடும்ப வாழ்வாதாரமான இந்த பசுமாட்டை கன்றுக்குட்டியில் இருந்து நாங்களே வளர்த்து வருகிறோம். இந்த பசு 3 கன்றுகளை ஒரே நேரத்தில் ஈன்றது மகிழ்ச்சி. திருப்பத்தூர் மாவட்டத்திலேயே இதுவரை ஒரு பசு 3 கன்றுகளை ஒரே நேரத்தில் ஈன்றதில்லை என்றார்.

Related Stories:

>