கொளத்தூர் தொகுதியில் ஒன்றினைவோம் வா நலத்திட்ட நிகழ்ச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவிகளை வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம்-6 அலுவலகத்தில், கொரோனா நோய்த் தடுப்பு ஊசிகள் போடும் பணியை பார்வையிட்டார். மேலும், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட கோவிட் மருத்துவ சிறப்பு அவசர ஊர்திகளை (Covid Special Ambulance) பார்வையிட்டார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாத்து, ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் அன்று ரூபாய் 4,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகைக்கான முதல் தவணையான 2000 ரூபாய் தொகையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

அவர்கள் 10.5.2021 அன்று 7 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராஜா கார்டன் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் நியாய விலைக் கடையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகைக்கான முதல் தவணை 2000 ரூபாய் நிவாரணத்

தொகையை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு இந்து, சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.தயாநிதி மாறன் மற்றும் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஐ. பரந்தாமன் மற்றும் திரு. தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: