×

கொரோனா நிவாரண பணிக்காக சன் டி.வி குழுமம் ரூ.10 கோடி நிதி உதவி!: முதலமைச்சரிடம் கலாநிதிமாறன் வழங்கினார்..!!

சென்னை: கொரோனா நிவாரண பணிகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்துக்கு சன் டி.வி குழுமம் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு தொழிற்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், திரையுலகினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்  உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதியை முதலமைச்சரிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வழங்கி வருகின்றனர். 


இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து 10 கோடி ரூபாய்க்கான காசோலையை சன் டி.வி குழும தலைவர் கலாநிதிமாறன் மற்றும் காவேரி கலாநிதிமாறன் ஆகியோர் வழங்கினர். சன் டி.வி குழுமம் சார்பில் நிவாரண நிதி வழங்கிய போது முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உடனிருந்தார். மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு பணிக்காக 30 கோடி ரூபாய் வழங்கப்படும் என சன் டி.வி குழுமம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் ஒருபகுதியாக மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்துக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சரை சந்தித்து ரூ.50 லட்சம் நிதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 



Tags : Corona ,CV Group ,ColonityMaran ,Chief Minister , Corona relief work, Sun TV Group, Finance
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...