அம்பத்தூர் மண்டலத்தில் 1.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ தகவல்

ஆவடி: அம்பத்தூர் மண்டலத்தில் 1.24 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ கூறினார். அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட அம்பத்தூர், கள்ளிக்குப்பம், பாடி, கொரட்டூர், முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ துவக்கிவைத்து பார்வையிட்டார். இதன்பின்னர் எம்எல்ஏ கூறியதாவது; அம்பத்தூர் மண்டலத்தில் தினசரி 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 1 லட்சத்து 24 ஆயிரத்து 997 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. முதல் தவணையாக 79 ஆயிரத்து 698 பேருக்கும் 2ம்தவணையாக 33ஆயிரத்து, 548 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அம்பத்தூர் எரிவாயு தகன மேடையில் பழுதடைந்த ஒரு இயந்திரத்தை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பணிகள் விரைவில் முடிவடையும் பட்சத்தில் சடலங்களை எரிப்பதற்கு எவ்வித காலதாமதம் ஏற்படாது. கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை எரிக்க கூடுதல் பணம் வசூலித்தால், ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு எம்எல்ஏ கூறினார். அப்போது மண்டல அலுவலர் விஜயகுமாரி, மண்டல செயற் பொறியாளர்கள் சதீஷ்குமார், சுந்தரேசன், சுகாதாரத்துறை அலுவலர்கள் டாக்டர்கள் ஷீலா, துளசி ஆகியோர் இருந்தனர்.

Related Stories:

>