ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் வீதி, வீதியாக கிருமி நாசினி தெளிப்பு: கிராமங்களில் தடுப்பூசி முகாம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் தெரு, தெருவாக கிருமிநாசினி தெளித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில், கொரோனா பரவலை தடுக்க செயல் அலுவலர் மாலா தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர் குமார் முன்னிலையில் ஊழியர்கள் நேரு சாலை, நேரு பஜார், திருவள்ளூர் சாலை மற்றும் அண்ணாநகர், நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை பகுதிகளில் பேரூராட்சியின் மினி லாரியின் மூலம் கடை, வீடுகள் மற்றும் தெருக்களில் கிருமி நாசினி தெளித்தனர். அப்போது முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் எச்சரித்து அனுப்பினர்.

எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் பஸ் நிலையம்,கன்னிகைப்பேர், தாராட்சி மற்றும் ஆமிதா நல்லூர் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பெரியபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் தலைமையில் டாக்டர் சுர்ஜித், செவிலியர்கள் ஆகியோர் முன்கள பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

Related Stories:

>