வேகமெடுக்கும் கொரோனா தொற்று!: சென்னையில் விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி..மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னை: சென்னை நகரில் தடுப்பூசி செலுத்துவதற்கு விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றின் வீக்கம் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தாக்கத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொற்றானது குறைந்தபாடில்லை. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படுகின்றனர். நோயாளிகள் அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. 

இதன் காரணமாக பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில், தடுப்பூசிக்கு விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் குடியிருப்போர் விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் 30 வயதுக்கு மேல் இருந்தால் அந்தந்த நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கே வந்து சிறப்பு முகாம் போடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதற்காக விண்ணப்பிப்போர் மற்றும் நிறுவனங்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் மண்டலம், வார்டு குறித்த விவரங்களுடன் இணையத்தில் மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது மாநகராட்சி மண்டல அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: