கொரோனா 2ம் அலையை விளையாட்டா நினைக்காதீங்க... வீணாக ஊர் சுத்தாதீங்க...-அறிவுரை கூறும் போலீசார்;அடங்க மறுக்கும் மக்கள்

பழநி : திண்டுக்கல்லில் காய்கறி, மளிகை மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளை ஏராளமானோர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கடைகளுக்கு செல்வதாகக் கூறி வீட்டில் இருக்காமல், டூவீலர்களில், கார்களில் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டே இருக்கின்றனர்.

போலீசார் அறிவுரை கூறியும், அபராதம் விதித்தும் எவ்வித பயனும் இல்லை. இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த பழநி நகரின் எல்லைகளில் டிஎஸ்பி சிவா தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவசியமின்றி பழநி நகருக்குள் நுழைய முயன்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து ேபாலீசார் கூறுகையில்,  மக்கள் போதிய விழிப்புணர்வின்றி, விளையாட்டாக நினைத்து, ஊர் சுற்றிக் கொண்டு விதியோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, மக்கள் அபராதத்திற்கு பயந்தோ, வழக்கிற்கு அஞ்சியோ இன்றி, தங்கள் மற்றும் குடும்பத்தின் நலன் கருதி, கட்டுப்பாடுகளை மீறாமல், வீட்டிலேயே இருக்க வேண்டும், என்றனர்.

ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு அபராதம்

திண்டுக்கல் சீலப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வரதராஜ் (29) என்பவர், சுகாதார ஆய்வாளராக  பணியாற்றி வருகிறார். நேற்று சீலப்பாடி பகுதியில் மாஸ்க் அணியாமல் வந்த அவரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் போலீசார்,  ‘‘மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே, இப்படி விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால் எப்படி’’ என கேட்டனர்.

இதையடுத்து சுகாதார ஆய்வாளருக்கு மாஸ்க், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு, எஸ்ஐ வேலுச்சாமி அபராதம் விதித்தார்.ேமலும் திண்டுக்கல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்–்குமார் தலைமையில் போலீசார், ஊரடங்கை மீறி சாலையில் சுற்றி திரிந்த 29 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: