இஸ்ரேல் அருகே மேற்கு கரையில் வழிபாட்டு தளம் இடிந்து விபத்து!: 2 பேர் உடல் நசுங்கி பலி..150 பேர் படுகாயம்..!!

ஷாவியட்: மேற்கு ஆசியாவில் மிர்டேரியன் கடல் அருகே அமைந்துள்ள மேற்கு கரை பகுதியில் வழிபாட்டு தளம் ஒன்றின் தற்காலிக மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 150 பேர் படுகாயமடைந்தனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு கரையில் யூதர்கள் குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட ஷாவியட் என்ற பகுதியில் வழிபாட்டு தளம் ஒன்றில் நேற்று பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. புதிதாக கட்டப்பட்டு வரும் வழிபாட்டு தளத்தின் தற்காலிக மேடையில் பிரார்த்தனை நடைபெற்றது. 

500க்கும் மேற்பட்டவர்கள் பிரார்த்தனையில் பங்கேற்று கொண்டிருந்த போது திடீரென பாரம் தாங்காமல் தற்காலிக மேடை சரிந்து விழுந்தது. மேடை சரிந்ததால் நிகழ்விடத்திலேயே இருவர் உடல் நசுங்கி உயிர் இழந்தனர். படுகாயமடைந்துள்ள 150 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினரின் மோதல்களால் ஏற்கனவே மேற்கு கரையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் வழிபாட்டு தளம் இடிந்து இருவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது. 

Related Stories:

>