கறுப்பு பூஞ்சை நோய் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் பரவியது

பெங்களூரு: கர்நாடகா, கேரளாவில் கொரோனா தொற்றை தொடர்ந்து கறுப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் நோயால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு கண் பார்வையையும், உயிரையும் பறிக்கும் கறுப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் தென்பட்ட இந்த நோய் படிப்படியாக பிற  மாநிலங்களில் பரவ தொடங்கிவிட்டது. கர்நாடகாவில் முதன் முதலில் பெங்களூருவில் பாதிப்பை  ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் 14 பேர் கறுப்பு பூஞ்சையால் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில் 2 பேர் இறந்துள்ளனர். 5 பேருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல பெலகாவில் ஏற்கனவே 2 பேர் இறந்துள்ளனர். கோலார் மாவட்டத்தில் 12 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் தமிழ்நாட்டில் இருந்து வந்த 3 பேர் உள்பட 7 பேருக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் பரவியுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்த நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் நீண்டகால சர்க்கரை ேநாய் உள்ளவர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்படுகிறது. இதே போல, ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மார்க்கபுரத்தில் கொரோனாவில்  இருந்து மீண்ட 6 பேருக்கு கண்ணில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: