உத்தரகாண்ட்டில் 2 வாரத்தில் 1600 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

ஹரித்துவார்: உத்தரகாண்ட்டில் கடந்த 2 வாரத்தில் 1600 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இங்கு, ஹரித்துவார் கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் கூடிய நிலையில் தொற்று பரவல் படுவேகமாக உள்ளது. இந்நிலையில், கடந்த 10 நாளில் 9 வயதுக்கு உட்பட்ட 1000  குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறி உள்ளது. கடந்த ஏப்ரல் 1 முதல் 15ம் தேதி வரை 264 குழந்தைகளுக்கும், ஏப்ரல் 16 முதல் 30 வரை 1,053 குழந்தைகளுக்கும், மே 1 முதல் 14  வரை 1,618 குழந்தைகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது பெற்றோர் மத்தியில் பீதியை உண்டாக்கி இருக்கிறது.

Related Stories:

>