பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

புதுடெல்லி,: நாடு முழுவதும் நேற்று பெட்ரோல் விலை 22 காசும், டீசல் விலை 26 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவிய மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்து, ஒரு பீப்பாய் 25  டாலருக்கு கீழ் வந்தது. அந்த நேரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக மத்திய, மாநில அரசுகள் கலால் வரியை உயர்த்தி விட்டன. கடந்த ஆண்டின் ஜூன் மாதத்திற்கு பின் கச்சா எண்ணெய் விலை  உயரத்தொடங்கியதும்,

 நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கின. 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த தொடங்கியுள்ளனர். நடப்பு மாதம் 15 நாளில்,  பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.66ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.06ம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நேற்று பெட்ரோல் 22 காசும், டீசல் 26 காசும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.09ல் இருந்து 22 காசு உயர்ந்து ரூ.94.31க்கும், டீசல் ரூ.87.81ல் இருந்து 26 காசு உயர்ந்து ரூ.88.07க்கும்  விற்பனை செய்யப்பட்டது. கொரோனா நோய் தொற்று பரவல், ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து மக்கள் கடும் பாதிப்பை சந்தித்திருக்கும் இவ்வேளையில், பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே  பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: