இஸ்ரேலில் குண்டு வீச்சில் பலியான கேரள நர்சின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள கீரித்தோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சவுமியா (36). இவர் இஸ்ரேலில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 11ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய  ராக்கெட் குண்டு வீச்சில் நர்ஸ் சவுமியா உட்பட ஏராளமானோர் பலியானார்கள். இஸ்ரேலிய அரசு சவுமியாவின் உடலை தனி விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைத்தது. நேற்று முன்தினம் அதிகாலை அவரது உடல் டெல்லி வந்தது.

பின்னர் வேறு விமானத்தில் உடல் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று  முன்தினம் இரவு கொச்சிக்கு வந்த சவுமியாவின் உடல் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கீரித்தோட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சவுமியாவின் உடல்  கீரிதோட்டத்தில் உள்ள நித்ய சகாயமாதா ஆலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories:

>