ஊட்டியில் கோடை விழா 2ம் ஆண்டாக ரத்து

ஊட்டி:  நீலகிரி மாவட்ட வரலாற்றில் கடந்த ஆண்டு முதன்முறையாக கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஊட்டி தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. கொரோனா பரவல் சற்று குறைந்ததால்  கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் சுற்றுலா பயணிகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டது. இந்த முறை கோடை சீசனை சிறப்பாக நடத்த பூங்காக்கள் தயார் செய்யப்பட்டன. ஆனால், கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்றின் 2வது  அலை தீவிரமடைந்ததால் கடந்த மாதம் 20ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டு அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. கடந்த 10ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்  காரணமாக 2வது ஆண்டாக இம்முறையும் கோடை விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>