எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் புதிய ரயில் பாதையில் திடீரென ஓடிய ரயில் இன்ஜின்: மதுரையில் பொதுமக்கள் பீதி

மதுரை:மதுரை - போடிநாயக்கனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 90 கிமீ தூரமுள்ள இந்த ரயில் பாதையில், ஏற்கனவே 37 கிமீ மதுரை - உசிலம்பட்டி அகல ரயில்  பாதை பணிகள் முடிந்து கடந்த 2020 ஜனவரியில் ஆய்வு செய்யப்பட்டது.  பின்னர் உசிலம்பட்டி - ஆண்டிபட்டி இடையே 21 கிமீ நீளமுள்ள ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றி கடந்த 2020, டிசம்பர் 16ம் தேதி ஆய்வு செய்யப்பட்டது. இந்த பாதையில் ரயில் சோதனை ஓட்டமும் முடிந்து விட்டது.

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4.45 மணி அளவில் மதுரை, நாகமலை புதுக்கோட்டை அருகே போடி லைன் தண்டவாளத்தில் திடீரென ரயில் இன்ஜின் ஒன்று வேகமாக வந்தது.

இதனை கண்ட அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.   எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி ரயில் இன்ஜின் கடந்து சென்றது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ரயில்வே கேட் கீப்பர் சம்பவ இடத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது. ஏதேனும் அசம்பாவிதம்  நடந்திருந்தால் ரயில்வே  நிர்வாகம் பொறுப்பு ஏற்குமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.

Related Stories:

>