முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நிவாரண நிதியை அனுப்புங்கள்; டிப்ளமோ பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்களுக்கு சங்கம் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலை பட்டய பொறியாளர்கள் சங்க  செயலாளர் மாரிமுத்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்க மாநில பொதுச்செயலாளர் குருசாமி ஆகியோர்  வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. நோயை கட்டுப்படுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அவருக்கு துணையாக இருப்பது நமது கடமையாகும். அரசின் கடும் நிதிச்சுமைக்கும் இடையே மக்கள் நலன் கருதி முதல்வர் கொரோனா நிதியை குடும்ப அட்டைதாரர்களுக்கு (ரேசன் கார்டு) முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தினை வழங்கி  வருகிறார். நிவாரண நிதி வருமான வேறுபாடுகள் இன்றி வழங்கப்படுவதால் இத்தொகை நம் அனைவருக்கும் கிடைக்கும் நிலையுள்ளது.  எனவே, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அரசிடம் இருந்து பெறக்கூடிய நிவாரண தொகை ரூ.2 ஆயிரத்தோடு தங்களால் கூடுதலாக எவ்வளவு தொகையினை வழங்க முடியுமோ அந்த நிதியை சேர்த்து முதல்வரின் நிவாரண நிதிக்கணக்கில்  செலுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: