ஆகமப் பயிற்சி பெற்று பட்டம் பெற்று காத்திருப்பவர்களை அர்ச்சகராக நியமிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி வேண்டுகோள்

சென்னை: ஆகமப் பயிற்சி பெற்று அரசு நியமித்த பள்ளிகளிலிருந்து பட்டம் பெற்று காத்திருப்போரை அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில் அர்ச்சகர்களாக (ஆகமப் பயிற்சி பெற்று அரசு நியமித்த பள்ளிகளிலிருந்து பட்டயம் பெற்ற 205 அனைத்து ஜாதியினர்) ஆவதற்குத் தகுதி உடையவர்களாக  அறிவிக்க” 2006ல் ஆட்சிக்கு வந்த  முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்ட நாள்.

 திராவிடர் இயக்க வரலாற்றில் மறக்க முடியாத முக்கிய நாள் இன்று - மே 16. தந்தை பெரியார் அவர்களது ‘நெஞ்சில் தைத்த முள்ளை’ அகற்றிடும் வகையில், அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி, 23.5.2006ல் அரசு ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

ஜாதி, தீண்டாமை ஒழிப்புத் திட்டமாக இச்சட்டத்தின்படி காத்திருப்போர் நெஞ்சில் பால் வார்த்து, கருணையுடன் நியமித்து, கலைஞர் விருப்பமாம், தந்தை பெரியார் ‘நெஞ்சின் முள்ளை’ அகற்றி முழு வரலாற்று முத்திரையைப் பொறிக்க முதல் அமைச்சரை வேண்டுகி

றோம். இன்று வரலாற்றுக்குறிப்பு நாளாக நினைவூட்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>