அபாகஸில் தேசிய சாதனை!

நன்றி குங்குமம் தோழி

கலைமதி முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி. இந்தாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் “டாப்பர் ஆஃப் டாப்பர்”, “சாம்பியன் ஆஃப் சாம்பியன்” என்ற பட்டத்தை பெற்றுள்ளார். மேலும் அபாகசில் உள்ள அனைத்து படிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சிறு வயதிலேயே “ஹைரேஞ்ச்” எனும் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். கலைமதி தன்னுடைய மூன்று வயதில் அபாகஸ் பயிற்சியில் சேர்ந்துள்ளார். அப்போதே அபாகஸின் மூன்று நிலைகளில் தேர்ச்சி பெற்று, பள்ளியில் கணிதப் பாடத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார்.

இரண்டு மற்றும் மூன்று இலக்கு எண்களில் கூட, கணித செயல்பாடுகளை எளிமையாகவும், விரைவாகவும் செய்ய முடிகிறது. இவர் ஐந்து வயது இருக்கும் போது, அபாகசின் ஒன்பது படி நிலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது திறனை “ஹைரேஞ்ச்” எனும் உலக சாதனை புத்தகம், ‘மிகச் சிறிய வயதில், அபாகசின் அனைத்து படி நிலைகளையும் வென்ற குழந்தை’ என்று பதிவு செய்து பாராட்டி உள்ளது.

மாணவ, மாணவிகளின் சாதனைகள் குறித்து ஆல்வின் சர்வதேச பள்ளியின் தலைவர் ந.விஜயன் கூறுகையில், ‘‘ஒரு குழந்தையை நல்வழிப்படுத்துபவர்கள் இரண்டு பேர். அவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். குழந்தைகள் பெற்றோர்களைவிட பள்ளியில்தான் தன் அன்றாட வாழ்வில் அதிகம் செலவிடுகின்றனர்.

அதனைப் பயனுள்ளதாக மாற்றிக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை. ஏன் அந்தந்த பள்ளியின் கடமை என்றே கூற வேண்டும்.

இங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் நாங்கள் பாடக்கல்விக்கு அடுத்து அவர்களின் தனித்திறமையை வளர்ப்பதற்கு ஊக்குவிப்பு அளிக்கிறோம்.

உதாரணமாக, ஒவ்வொரு மாணவருக்கும் யோகா, கராத்தே,  சிலம்பம், வில் வித்தை, ரைஃபிள் ஷூட்டிங், ஸ்கேட்டிங், நடனம், இசை... போன்ற தனித்திறமை வாய்ந்த பல்வேறு திறன் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.  அவற்றை திறமை வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் கற்றுக் கொடுக்கிறோம்.

அதில், எந்தத் துறையில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட முறையிலும் பயிற்சியளித்து

வருகிறோம். இதனால், அவர்களின் கல்வியுடன் தனித்திறமையும் மேலோங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை’’ என்றார்.   

தொகுப்பு: தி.ஜெனிஃபா         

Related Stories: