தமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து: காங்கிரஸ் கலைப்பிரிவு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கலைப்பிரிவு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு மாநில செயற்குழு கூட்டம் காணொலி மூலம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கலைப்பிரிவு தலைவர் கே. சந்திரசேகரன், கலைப்பிரிவின் மாநில நிர்வாகிகள், மாவட்டத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

* சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

* சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் மற்றும் தோழமைக்கட்சி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கலைப்பிரிவு நிர்வாகிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

*  தமிழக அரசின் நடவடிக்கைகளுக்குட்பட்டு, தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில் சிக்கியிருக்கும் மக்களுக்கு, நம்மையும் பாதுகாத்துக்கொண்டு, இயன்ற அளவில் உதவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>