ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள், வாகனங்கள் திட்டமிடவில்லை, தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது: ப.சிதம்பரம்

டெல்லி: தடுப்பூசி தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலையின் போது அரசின் அணுகுமுறை உண்மைகளை மறுப்பது மற்றும் மறைப்பது, பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்வது தாம். விளைவு: பெருங் குழப்பம். பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவதற்கு I.C.E. என்ற மும்முனை அணுகுமுறை வேண்டும், அது அரசிடம் இல்லை. முதல் அலையின் போது சுயவிளம்பரமும் வெற்றிக்களிப்புமே இருத்தன. மூன்றாம் அலை, நான்காம் அலை வந்தால் அவற்றைச் சந்திப்பதற்கு அரசிடம் எந்தத் திட்டமும் கிடையாது.  இரண்டாவது அலை தொடங்கிய போது இதுவும் முதல் அலை போன்று மெதுவாக உயர்ந்து, சமநிலைக்கு வந்து, பிறகு ஓய்ந்து விடும் என்று அரசு கருதியது.

ஆகவே, இரண்டாம் அலையின் வேக உயர்வுக்கும் பரவலுக்கும் அரசிடம் எந்தத் திட்டமுமில்லை. எதிர்கால தேவைகளுக்கு - ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள், வாகனங்கள் - திட்டமிடவில்லை. தேவையான செவிலிகளை வேலையமர்த்த எந்தத் திட்டமும் இல்லை. தடுப்பூசி போட்டதின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஏப்ரல் 2ம் நாள் 42 இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் ஏப்ரல் மாத நாள் சராசரி 30 இலட்சமே. மே மாதத்தில் இதுவரை நாள் சராசரி 18 இலட்சம் தான். தடுப்பூசி தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது.

Related Stories:

>