தமிழக மதுக்கடைகள் மூடல் எதிரோலி!: ஆந்திர எல்லையோர கிராமங்களுக்கு படையெடுக்கும் மது பிரியர்கள்..முட்டி மோதி மதுவாங்கினர்..!!

ஹைதராபாத்: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் எல்லையோரம் இருக்கும் தமிழக கிராமங்களில் இருந்து ஆந்திர மதுக்கடைகளில் கூட்டம், கூட்டமாக கூடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பங்களாமேடு போன்ற இடங்களில் ஆந்திர அரசு மதுக்கடைகளை செயல்படுத்தி வருகிறது. ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் தமிழக மக்கள் அதிகளவில் ஆந்திர மதுக்கடைகளில் குவிந்து முட்டி மோதி மதுபானத்தை வாங்கி வருகின்றனர். 

இதனால் கொரோனா நோய் தொற்றும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் பொது முடக்கம் அமலில் இருந்தாலும் மதுக்கடைகள் காலை முதல் மதியம் 12 மணி வரை திறந்து விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கியிருப்பதே இதற்கு காரணம். இதேபோன்று கர்நாடகாவிலும் மாநில அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் ஓசூரில் இருந்து பொதுமக்கள் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு சென்று இறைச்சியை வாங்கி வருகின்றனர். அத்திப்பள்ளிக்கு சென்று இறைச்சி வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேலும் அங்குள்ள மதுக்கடைகளிலும் குடிமகன்கள் ஏராளமானோர் குவிந்ததால் நோய் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

Related Stories:

>