ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை: அமைச்சர் நாசர்

சென்னை: ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரித்திருக்கிறார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் விலை குறைக்கப்பட்ட ஆவின் பால் விற்பனையை அவர் தொடங்கிவைத்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பால் விலையை குறைத்து தமிழக மக்களின் வயிற்றில் முதலமைச்சர் பால்வார்த்திருப்பதாக கூறினார். அரசு நிர்ணயித்திருக்கும் விலையை விட கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் எச்சரித்தார்.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் ஆவின் பால் விற்பனையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் நாசர் குறிப்பிட்டார்.

Related Stories:

>