மோடியை விமர்சிக்கும் சுவரொட்டி: என்னையும் கைது செய்யுங்கள் என்று ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ராகுல் டுவிட்

டெல்லி: பிரதமர் மோடியை விமர்சிக்கும் சுவரொட்டி தொடர்பாக, தன்னையும் கைது செய்யுமாறு ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  மோடி-ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பூசி ஏன் வெளிநாடு சென்றது? என்ற சுவரொட்டியை அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். முன்னதாக தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து டெல்லியில் பல இடங்களில் சுவரொட்டியில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பி சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.  

இந்த சுவரொட்டிகள் தொடர்பாக நகரின் பல காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த சுவரொட்டிகளை ஒட்டிய 17 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கொரோனா நெருக்கடியை மத்திய அரசாங்கம் கையாளுவதை விமர்சிக்கும் சுவரொட்டிகளை ஒட்டியதாக டெல்லியில் பலர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories:

>