அரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை கழகம்

சென்னை: அரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாகப் புகார்கள் எழுந்ததையடுத்து தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைதளம் வழியாக நடைபெற்றது. இதில் பி.இ, பிடெக், மற்றும் எம்.இ, எம்.டெக் படிப்புகளில் முதலாம் ஆண்டை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியானது.

Related Stories:

>