கொல்லுயிரியை வென்றெடுக்க மன தைரியமே முக்கியம்!: சேலத்தில் கொரோனா பயத்தால் மாற்றுத்திறனாளி குடும்பம் தற்கொலை..!!

சேலம்: சேலத்தில் கொரோனா பயத்தால் மாற்றுத்திறனாளி ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன தைரியம் தான் முக்கியம். துணிச்சலோடு நோயை எதிர்கொண்டால் கொரோனாவில் இருந்து மீள முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சேலம் தாதகாப்பட்டி, மூன்றாம் கரடு பகுதியை சேர்ந்த கோபிநாத், அவரது மனைவி பவித்ரா, 5 வயது குழந்தை நந்திதா ஆகியோரே உயிரிழந்தவர்கள். மாற்றுத்திறனாளியான கோபிநாத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதோடு மூச்சு திணறலும் இருந்து வந்துள்ளது. 

சந்தேகமடைந்த அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதாக கூறப்படுகிறது. அதன்பின் கணவன், மனைவி, குழந்தை மூவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கதவு மூடியே இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், வீட்டின் மேற்கூரை வழியாக உள்ளே பார்த்தபோது மூவரும் சடலமாக கிடந்தது தெரியவந்தது. 

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன தைரியமும், தன்னம்பிக்கையும் தான் முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா பயத்தால் மாற்றுத்திறனாளி, குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொற்றுக்கு ஆளாவோர் அது தொடர்பான சிகிச்சைக்கும் கூடுதல் வழிகாட்டுதலுக்கும் சுகாதார அதிகாரிகளை நாடலாம். அதற்கு பதிலாக தவறான முடிவை தேட வேண்டாம் என்றும் மருத்துவ அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Related Stories:

>