கொரோனா நிலவரம் தொடர்பாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், உ.பி., மற்றும் புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா நிலவரம் தொடர்பாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர், உ.பி., மற்றும் புதுச்சேரி முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல், பிரதமரிடம் கூறியதாவது: மாநிலத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 

கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகளில், அதனை கட்டுப்படுத்துவதற்காக கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மாநிலத்திற்கு தேயைான தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என தெரிவித்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி இடையே நடந்த ஆலோசனை நடந்தது.அப்போது, ஆக்சிஜன் சப்ளை, அனைவருக்கும் இலவச தடுப்பூசி மற்றும் தடுப்பூசி வீணாவதை தடுப்பது குறித்து பிரதமர் ஆலோசனை வழங்கினார் என உ.பி., முதல்வர் கூறினார்.

Related Stories: