மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடிந்த தொடர்களுக்கு பின்னர் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடும். அதே போன்று ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் எந்த அணி முதலிடத்தில் உள்ளது என்ற நிலவரத்தையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய அணி 121 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்திய அணிக்கு அடுத்த நியூசிலாந்து அணி ஒரு புள்ளிகள் குறைவாக பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இவ்வாறு தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக இந்திய அணி முதலிடம் பெற்று அசத்தி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்திய அணி நம்பர் ஒன் அணியாக விளங்கி வருவதற்கு தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார்.