தமிழகத்தில் மே 18 முதல் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் விற்பனை: தமிழக அரசு முடிவு

சென்னை: மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் மருந்து தகுதியான நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்துவதை மருத்துவத்துறை கண்காணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேவையற்ற முறையில் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யாதவாறு மருத்துவத்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவமனைகளின் தேவைகளை இணையதளத்தில் பதிவிட வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

Related Stories: