ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக சமூகவளைதலத்தில் பதிவிட்ட 3 பேர் கைது: போலீசார் விசாரணை

சென்னை : ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக சமூகவளைதலத்தில் பதிவிட்ட 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். 2 ரெம்டெசிவிர் குப்பி மற்றும் ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். அடையாறு துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து மருந்தை இறக்குமதி செய்து கள்ளச்சந்தையில் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனை செய்தது அம்பலம் ஆகிவுள்ளது.  ரெம்டெசிவிர் மருந்தை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர். இந்நிலையில் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தனியார் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிந்த ஊழியர் விஷ்ணு உள்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். தனியார் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால் தான் அவர்களது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த மருந்து வாங்குவதற்கு 5 இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். மேலும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த தடுப்பு மருந்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Related Stories:

>