தீவிரமடையும் கொல்லுயிரி!: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கும், கொரோனா பரவலை குறைப்பதற்குமான நடவடிக்கையாக ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கான செயல்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த அடிப்படையில் இன்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு முறையான உதவிகள் செய்யப்படுகின்றனவா? ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தங்கு தடையின்றி ஆக்சிஜன்கள் சென்று சேர்கிறதா? அதேநேரத்தில் கட்டண மையங்களில் நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு எவ்வித உதவிகள் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை தமிழக முதல்வர் ஆலோசித்து வருகிறார். அதேநேரத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக உலகளாவிய டெண்டர் விடப்பட்டது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் சாதாரண படுக்கை வசதி, ஆக்சிஜன் படுக்கை வசதி, ஐ.சி.யூ போன்ற வார்டுகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

Related Stories: