கேரளாவில் 3 தமிழர்கள் உள்பட 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் : மக்கள் அதிர்ச்சி

திருவனந்தபுரம் : கேரளாவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மியூக்கர்மைக்கோசிஸ்கருப்பு பூஞ்சை நோய் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவிலும் சில இடங்களில் இந்த கருப்பு பூஞ்சை நோய் பரவி உள்ளது. இதை கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்துள்ளார்.

கேரளாவில் தமிழ்நாட்டில் இருந்து வந்த 3 பேர் உள்பட 7 பேருக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் பரவியுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்த நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் நீண்டகால சர்க்கரை ேநாய் உள்ளவர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்படுகிறது.மண் மற்றும் காற்றில் காணப்படும் கருப்பு பூஞ்ைசயானது பெரும்பாலும் மூக்கு வழியாக பரவுகிறது. கேரளாவில் கருப்பு பூஞ்சை நோய் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: