கொரோனா நோயாளிக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிட மத்திய அரசு முடிவு!: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்..!!

டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவின் வைரஸை போராடி அழிக்கும் நோய் எதிர்ப்பு அணுக்கள் உருவாகியிருக்கும். அவற்றை பிரித்தெடுத்து கொரோனா பாதித்தவர்களின் உடலில் செலுத்தும் போது மேற்கொண்டு வைரஸ் பரவாமல் தடுக்கும். இந்த பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்காக கொரோனாவில் இருந்து குணமடைந்த பலர் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்து வருகின்றனர். 

கொரோனா முதல் அலை பரவலின் போது பலருக்கும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பிளாஸ்மா தெரபி சிகிச்சை பயனுள்ளதாக உள்ளதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வைரஸ் பாதிப்பில் இருந்து மீட்பதிலோ அல்லது உயிரிழப்பை கட்டுப்படுத்துவதிலோ பிளாஸ்மா சிகிச்சையால் எந்த பயனும் இல்லை என தெரிய வந்துள்ளது. 

இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிளாஸ்மா சிகிச்சையை கைவிட ஐ.சி.எம்.ஆர். முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Related Stories:

>