உலகம் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்வதற்கான விமான சேவை தடையை நீக்கியது ஆஸி. அரசு May 16, 2021 ஆஸ்திரேலிய வீரர்களான இந்தியா ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா: இந்தியாவில் ஆஸ்திரேலியா செல்வதற்கான விமான தடை முடிவடைந்தது. இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் ஆஸ்திரேலியா சென்றடைந்தது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் விமான சேவைக்கு ஆஸி. அரசு தடை விதித்திருந்தது. ந்தியாவில் இருந்து தடையை மீறி நாடு திரும்பினால் 5 ஆண்டு வரை சிறையும், 66 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் வரையில் அபராதம் (சுமார் ரூ.37 லட்சம்) விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. இந்த தடை உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் தயாரானது. இதில் 150 பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பேர் மட்டுமே பயணித்தனர். எஞ்சியவர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால் பயணிக்க முடியாமல் போய்விட்டது என இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ பேரல் தெரிவித்தார். இந்த விமானம் நேற்று ஆஸ்திரேலியாவின் டார்வின் போய் தரை இறங்கியது.
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்