சில்லி பாயின்ட்…

* இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டபுள்யு.வி.ராமன், தனக்கு எதிராக சிலர் உள்நோக்கத்துடன் அவதூறான இமெயில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதாகவும் அதை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து உறுதியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறி வருவதாக தெரிவித்துள்ள சுவிஸ் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், முன்னணி வீரர்கள் இதில் தங்களின் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.  

* புனேயில் நடந்து வரும் தேசிய பாக்சிங் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக சென்ற குத்துச்சண்டை நட்சத்திரம் மேரி கோம், ஒரு வார கால கட்டாய தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளார். எனினும் தனிமையில் தனது பயிற்சியை தொடர அவர் முடிவு செய்துள்ளதாக பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். 6 முறை உலக சாம்பியனான மேரி கோம், டோக்கியோ ஒலிம்பிக்சின் மகளிர் 51 கிலோ எடை பிரிவில் களமிறங்க தகுதி பெற்றுள்ளார்.  

* கத்தார் நாட்டில் பயிற்சி செய்ய உள்ள இந்திய கால்பந்து அணி வீரர்களுக்கு கட்டாய 10 நாள் தனிமைப்படுத்தல் இருக்கும் என்றாலும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தெரிகிறது. எனினும், டெல்லியில் இருந்து புறப்படும் முன்பாக கொரோனா தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்றிதழ் கொடுப்பது அவசியம்.

Related Stories: