சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெகன்மோகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடிய எம்பி கைது: மாநில அரசுக்கு எதிராக கலகத்தை தூண்டுவதாக வழக்குப்பதிவு

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் முறையிட்ட எம்பி மாநில அரசுக்கு எதிராக கலகத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத்தை சேர்ந்தவர் கிருஷ்ணம் ராஜு(59). இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார். இதனால், அவருக்கு ஆந்திர மாநில ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இவர் கடந்த ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். தொடர்ந்து, ெதலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், கிருஷ்ணம்ராஜு முதல்வர் ெஜகன்மோகனுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ  சிறப்பு நீதிமன்றத்திடம் கோரிக்க வைத்தார். மேலும், ெஜகன்ேமாகன் ஆட்சி மீது பல்வேறு ஊழல் புகார்களை கடந்த சில மாதங்களாக கூறி வந்தார்.

இந்நிலையில் கிருஷ்ணம் ராஜு மீது அரசுக்கு எதிராக கலகத்தை தூண்டுவது பிரிவு 124ஏ, சமூகத்தில் சில பிரிவினரிடையே பகைமையை தூண்டும் படி செயல்படுதல் பிரிவு 153ஏ, மற்றும் பொது அமைதிக்கு தீங்கு விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: எம்பி கிருஷ்ணராஜு இருபிரிவினருக்கு இடையே வன்முறையைத் தூண்டும் விதமாகவும், அரசுக்கு எதிராக கலகத்தை தூண்டி விடும் வகையிலும் பேசி வருவதாக புகார்கள் எழுந்தது. மேலும், தனது வெறுப்பைத் தூண்டிவிடும் பேச்சுக்கள் மூலம் எப்போதும் பதற்றத்தை உருவாக்குகிறார். அரசு முக்கியஸ்தர்களை நோக்கி அவர் வைக்கும் தாக்குதல்கள் அரசின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதாகவும் அரசுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டுவதாகவும் உள்ளதாக புகார்கள் எழுந்தது. அதன்பேரில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு போலீசார் நேரடியாக நேற்று சென்று கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: