குவாட்டர் வாங்க காசில்லாத மது பிரியர்களுக்காக ‘கட்டிங்’ பாட்டில் வருது: மபி அரசு அசத்தல் திட்டம்

போபால்: குவாட்டர் மது பாட்டில் வாங்கி குடிக்க காசில்லாத மதுப் பிரியர்களுக்காக வெறும் 90 எம்எல் கொண்ட ‘கட்டில்’ பாட்டிலை மத்தியப்பிரதேச அரசு அறிமுகப்படுத்த உள்ளது. மதுக்கடைகளுக்கு சென்றால் ‘கட்டிங்’ சரக்கு வாங்கி குடிக்க ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அவர்கள் யாருடனாவது சேர்ந்து, குவாட்டர் பாட்டில் வாங்கி ஆளுக்கு சரிபாதியாக ‘கட்டிங்’ பிரித்துக் கொள்வது வழக்கம். சில சமயம் ‘கட்டிங்’குக்கு ஆள் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திண்டாடுவதும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக வெறும் 90 மில்லி லிட்டர் கொண்ட ‘கட்டிங்’ மது பாட்டில்களை அறிமுகம் செய்ய மத்தியப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி தரப்பட்டுள்ளது. இனி மது உற்பத்தி நிறுவனங்கள் 10 சதவீதம் ‘கட்டிங்’ பாட்டில் தயாரித்து வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஜூன் 1ம் தேதி அமலுக்கு வர உள்ளது.

சமீபத்தில் அம்மாநிலத்தின் உஜ்ஜைன், மோரினா போன்ற பகுதிகளில் குவாட்டர் மது பாட்டில் வாங்கி குடிக்க காசில்லதாவர்கள் கள்ளச்சாரயம் குடித்ததில் 38 பேர் பலியாகினர். எனவே, குவாட்டர் வாங்க காசில்லாமல் யாரும் கள்ளச்சாரயம் குடிக்கச் செல்லக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் ’கட்டிங்’ பாட்டில் தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Related Stories: