போலி ரெம்டெசிவிர் மருந்தால் நுரையீரல் தொற்று குணமானது: ம.பி.யில் 90% பேர் பிழைத்த அதிசயம்

போபால்: மத்தியப்பிரதேசத்தில் போலி ரெட்டெசிவிர் மருந்து எடுத்துக்கொண்ட 90 சதவீத கொரோனா நோயாளிகள் உயிர் பிழைத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. குஜராத்தில் போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பது கடந்த ஒன்றாம் தேதி கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து போலி மருந்து தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பல் மொத்தம் 1200 போலி ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்திருந்தது. இதில் 700 பாட்டில்கள் இந்தூரிலும், ஜபல்பூரில் 500 பாட்டில்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. மும்பையில் இருந்து காலி பாட்டில்கள் வரவழைக்கப்பட்டு தொழிற்சாலை ஒன்றில் குளுக்கோஸ் உப்பு கலந்த நீர் நிரப்பப்பட்டு ரெம்டெசிவிர் என விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் விசாரணையின்போது  போலி ரெம்டெசிவிர் மற்றும் உண்மையான மருந்து எடுத்துக்கொண்டவர்களின் குணமடைந்த சதவீதம் போலீசாருக்கு திகைப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. போலி ரெம்டெசிவிர் எடுத்துக்கொண்ட 90 சதவீத கொரோனா நோயாளிகள் உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் நுரையீரல் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “100 கொரோனா நோயாளிகள் போலி ரெம்டெசிவிரை எடுத்துக்கொண்டபோதிலும் 90 பேர் தொற்றில் இருந்து தப்பியிருக்கின்றனர். எனினும் போலி மருந்து எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து கண்டறியப்பட வேண்டும்” என்றார்.

Related Stories: