விமானத்தில் தப்ப முயன்ற கொரோனா நோயாளி தடுத்து நிறுத்தம்: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு காலை 9.05 மணிக்கு செல்லும் ஏர் ஏசியா விமானம், நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படத்தயாரானது. அப்போது மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சுர்ஜித் (22) என்பவர் இந்த விமானத்தில் ஐதராபாத் வழியாக கொல்கத்தா செல்ல வந்தார். அவர் சளி, இருமலுடன் மிகவும் சோர்வாக இருந்தார். இதையடுத்து சந்தேகப்பட்ட அதிகாரிகள், அவருடைய மருத்துவ பரிசோதனை சான்றிதழை வாங்கிப்பார்த்தனர். அதில் அவருக்கு கொரோனா பாசிடீவ் என்றிருந்தது. இதனால், சுர்ஜித் பயணத்தை ரத்துசெய்து சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சென்னை விமான நிலைய சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து, பயணி சுர்ஜித்திற்கு பாதுகாப்பு கவச உடையை அணிவித்தனர். அதோடு அவரை தனி ஆம்புலன்ஸ் மூலம், தாம்பரம் சானடோரியம் அரசு நெஞ்சக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Related Stories:

>