சென்னையை சேர்ந்த மகள், தந்தை, தாய் உ.பி.யில் கொரோனாவுக்கு பலி: இறுதிச்சடங்கு நடத்த எந்த உறவும் இல்லாத வேதனை

சென்னை:  உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சென்னையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம், இவரது மகளுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானது. இவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த ஏப்ரல் 20ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். மகளுக்கு தந்தை ராமலிங்கம் இறுதிச் சடங்கை நடத்தினார். அடுத்த சில நாட்களில், ராமலிங்கத்திற்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இம்மாதம் முதல் வாரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு, இவரது மனைவி வனிதா இறுதிச் சடங்கை செய்து வைத்தார். அதற்கடுத்த சில நாட்களில், ராமலிங்கத்தின் மனைவி வனிதாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

யாருடைய ஆதரவும் இல்லாததால், வீட்டுத் தனிமையில் இருந்தார். ஆனால், கொரோனாவின் தீவிரம் அவருக்கு அதிகமானதால், அவரும் கடந்த புதன்கிழமை அவரும் இறந்தார். இவருக்கு இறுதிச்சடங்கை செய்வதற்கு யாரும் இல்லாததால், நொய்டா பிரிவு - 33ன் ஆர்.டபிள்யூ.ஏ தலைவர் பிரதீப் வோஹ்ராவும், அவரது நண்பர் வீரேந்திராவும், வனிதாவின் இறுதி சடங்கை நடத்தினர். சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 3 பேரும் கொரோனாவால் இறந்த நிலையில், அவர்களின் பின்புலம் குறித்த தகவல்கள் தெரியவில்லை.

Related Stories: